Skip to main content

''நல்ல முறையில் ஆட்சி நடக்கிறது'' - திமுக 100 நாள் ஆட்சி குறித்து பாஜக அண்ணாமலை கருத்து!

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

 BJP's Annamalai comments on DMK's 100-day rule

 

பொது நிதிநிலை அறிக்கையைத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (13.08.2021) சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்திருந்த நிலையில், தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக வேளாண்துறை பட்ஜெட்டை வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் வேளாண்துறைகளுக்கான பல்வேறு ஒதுக்கீடுகளை அமைச்சர் வாசித்தார். அதன்பின் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ''100 நாட்கள் ஆட்சி குறித்து சபையில் இருக்கும் நீங்கள் எவ்வளவு பாராட்டினாலும் எனக்கு, அடுத்துவரும் காலம் பற்றிய நினைப்பே அதிகம் இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்'' என உரை நிகழ்த்தினார்.

 

இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் திமுகவின் 100 நாள் ஆட்சி குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “நேர்மையான அதிகாரிகளை நியமித்து 100 நாட்களாக நல்லமுறையில் ஆட்சி நடக்கிறது. திமுக, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவருகிறது. ஆனால், குறைவாக உள்ளது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை வரவேற்கிறோம். ஆகம விதிப்படி நடந்தால் நல்லது'' என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்