அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிடுகிறது தமிழக பாஜக! இக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவர் அக்கட்சியின் தலைவர் எல்.முருகன். தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். தினமும் தேர்தல் பிரச்சாரம் துவங்குவதற்குவதற்கு முன்பு முருகனை சந்திக்கும் பாஜக நிர்வாகிகள், " உங்களுடன் பிரச்சாரத்துக்கு செல்லும் வாகனங்களுக்கும், தொகுதி முழுக்க சுற்றிவரும் வாகனங்களுக்கும் பெட்ரோல் போடணும். பணம் கொடுங்க" என்று கேட்கின்றனர்.
இதனால் எரிச்சல் அடையும் முருகன், " கட்சியின் மாநில தலைவர் நான். என்னிடமே பணம் கேட்பீங்களா? பிரச்சார வாகனங்களுக்கு பெட்ரோல் போட கூட வசதியில்லைன்னா அரசியலுக்கு எதுக்கு வர்றீங்க? கட்சி பதவி எதுக்கு உங்களுக்கு? பணமெல்லாம் தரமுடியாது. ஒழுங்க வேலையை பாருங்க! " என கோபப்படுகிறாராம். இது மட்டுமல்ல, அவருடைய பிரச்சார வாகனத்துக்கும் கட்சியினர்தான் எரிபொருள் நிரப்ப வேண்டும் என வலியுறுத்துகிறாராம் முருகன். இதனால் தொகுதியில் உள்ள பாஜகவினர் நொந்து போயுள்ளனர். தாராபுரத்தில் முருகனுக்கு எதிராக தாமரைக் கட்டியினரின் புலம்பல்கள் அதிகரித்து வருகின்றன.
அதேவேளையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஒவ்வொரு வேட்பாளரும் இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் ஒரு வரம்பு நிர்ணயத்துள்ளது. அதனை தாண்டி செலவு செய்தால் பிரச்சனை வருமென அக்கட்சியினர் சிலரும் பேசிக்கொள்கின்றனர்.