Skip to main content

கொடியேற்றத்துடன் தொடங்கியது பட்டணப் பிரவேச பெருவிழா! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

City Entrance Ceremony begins with flag hoisting!

 

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழா மற்றும் பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

 

மயிலாடுதுறையில் 11 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும் மே 18- ஆம் தேதி அன்று திருக்கல்யாணமும், வரும் மே 20- ஆம் தேதி அன்று திருத்தேர் உற்சவமும், மே 21- ஆம் தேதி அன்று தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது. வரும் மே 22- ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சிவிகை பல்லக்கில் பட்டணப் பிரவேசம் மேற்கொண்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

பாரம்பரியமாக நடைபெற்று வரும் பட்டணப்பிரவேச விழாவை நடத்த நடப்பாண்டில் தடை விதிக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டதால், இந்த விழா முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

 

இதனிடையே, பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பாதுகாப்புக்கோரி அரசிடம் விண்ணப்பிக்கவும், அதை பரிசீலித்து பாதுகாப்பு வழங்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்