Skip to main content

நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்-டிஜிபி அலுவலகத்தில் பாஜக மனு!

Published on 24/09/2022 | Edited on 24/09/2022

 

 

கடந்த 22 ஆம் தேதி மாலை வேளையில் கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலரின் கார், வீடு, வர்த்தக நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன.

 

இந்நிலையில், பாஜக சார்பில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெயரில் கொடுக்கப்பட்டுள்ள இந்த புகார் மனுவை பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன் தமிழக டிஜிபி அலுவலகத்திலும், தமிழக உள்துறை செயலாளரிடமும் புகார் மனுவை கொடுத்துள்ளார்.  அதில், 'பாஜக மற்றும் இந்து அமைப்பினை சேர்ந்த நிர்வாகிகள், பிரமுகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பிரச்சனை நிகழ வாய்ப்புள்ள இடங்களில் காவல் துறையினர் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்