Skip to main content

"தமிழக தலைவர் பற்றி நாங்களே கவலைப்படவில்லை" - பாஜக இல.கணேசன் பேட்டி 

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க.மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர்,

"குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் எந்த ஒரு இந்தியனுக்கும் பாதிப்பு ஏற்படாது. இந்த விஷயத்தில் நாட்டு நலனை நினைக்காமல் ஓட்டு நலனை கருத்தில் கொண்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் நடத்திவரும் திமுகவின் கையெழுத்து இயக்கம் மக்களின் பிரதிபலிப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

 

 bjp ila ganessan interview

 

தைப்பூசத்திற்கு தமிழகத்திற்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சீமான் கேட்பது வேடிக்கையாகத்தான் உள்ளது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயம். தேவைப்பட்டால் இதை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

பாஜக, அதிமுக கூட்டணி தொடரும். அதில் நம்பிக்கையோடு இருக்கிறோம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை ஏதோ ஒரு சாதாரண கொலையாக கருத முடியாது. அந்த வழக்கில் உள்ளவர்கள் விடுதலை என்ற கோரிக்கை எழுந்தபோது ஆளுநர்முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆளுநரின் முடிவு குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வருமான வரித்துறை சோதனை விஷயத்தில் மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கையாக உள்ளது. வருமான வரித்துறைக்கு கிடைத்தே தகவலின் அடிப்படையியிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஆதாரத்தின் அடிப்படையிலேயே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. எந்த பிண்ணியிலும் மத்திய அரசு இல்லை.

நெய்வேலி சுரங்கம் பாதுகாக்கப்பட்ட பகுதி தடை செய்யப்பட்ட இடத்தில் படப்பிடிப்பு நடத்த யார் அனுமதி அளித்தார்கள் என்றுதான் பாஜக தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். விஜய் என்பதற்காக மட்டும் அல்ல.
தமிழகத்தில்  பாரதிய ஜனதா மாநில தலைவர் நியமனம் குறித்து நாங்களே கவலைப்படவில்லை. யாராக இருந்தாலும் பாஜகவை சேர்ந்த ஒருவரே தலைவராக வருவார் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்