Skip to main content

”பாஜக அரசு மிரட்டி பணம் பறித்திருக்கிறது" -கார்த்திக் சிதம்பரம்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
BJP government has misused power to extort money says Karthi Chidambaram

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விஜய் இளஞ்செழியன் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றதில் பாஜக அரசு அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்திருக்கிறது. லாபமே இல்லாத கம்பெனிகள் எல்லாம் இவ்வளவு நிதி நன்கொடையாக கொடுத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. உச்சநீதிமன்றம் இதில் யார் நன்கொடை கொடுத்தார்கள் யார் பெற்றார்கள் என்பதை மட்டும் விசாரிக்காமல்   இதன் பின்னணியையும் விசாரிக்க வேண்டும். மேலும்  இதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான தனி விசாரணை கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம் “ஒரே நாடு ஒரே தேர்தல் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது. எதற்காக இந்த நாடாளுமன்ற தேர்தலை ஒன்றரை மாதம் நடத்துகிறார்கள். மோடியின் தேர்தல் சுற்றுப்பயண விவரங்களை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு அந்த  பயணத்தை அடிப்படையாக கொண்டே தேர்தல் தேதிகளை அமைத்து இருக்கிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பாக ஒரே நாளில் தேர்தலை நடத்தலாம் நமது நாட்டில் அதற்கான கட்டமைப்பு இல்லையா? ஈரான் ,ஈராக் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை ஒன்றிணைத்த அகண்ட பாரதத்தில் வேண்டுமானால்  400 தொகுதிகளை ஜெயிப்பதாக பாஜக கனவு காணலாம்.

பாஜக என்பது ஹிந்தி இந்துத்துவா கட்சி ஹிந்தி பேசாத மாநிலங்கள் என எடுத்துக்கொண்டால் குஜராத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் செல்வாக்கே கிடையாது. தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் திமுக  இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.

சார்ந்த செய்திகள்