
தமிழ்நாட்டில் மருத்துவ கல்வியில் சேரும் மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளித்தது வரவேற்கத்தத்தக்கது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் அதில் உட்படுத்தியிருக்க வேண்டும். இந்த ஆண்டு கடந்து விட்டது, அடுத்தாண்டு இதை அரசு செயல் படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் கல்வி கூடங்களின் தாளாளர்கள் அதிகரமற்றவர்கள், கவுரவ பதவி மட்டுமே உண்டு. அரசு பள்ளிகளின் கட்டணத்தையே அவர்களும் வசூல் செய்கின்றனர்.
ஆசிரியர்களுக்கு அரசுதான் முழுமையாக ஊதியம் அளிக்கிறது. அங்கேயும் சத்துணவு அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. ஏழைகள் அங்கும் அதிகளவில் படித்து வருகின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெருளாதார நிலை மிக குறைவானது. ஆகையானால் வரும் கல்வி ஆண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களையும் 7.5% மருத்துவ கல்வி உள் ஒதுக்கீட்டில் சேர்க்கவேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜரத்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.