தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளராக எஸ்.ஜி. சூர்யா இருந்து வருகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகியான இவர் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். இந்நிலையில் அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார், டி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இரு வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து எஸ்.ஜி. சூர்யாவை சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் ஜாமின் கோரி எஸ்.ஜி. சூர்யா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது, மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டும் படி நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் நிபந்தனையுடன் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று தற்போது அந்த நிபந்தனைகளை மீறி மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் இருந்து வந்துள்ளார். இது குறித்து எஸ்.ஜி. சூர்யாவிடம் விசாரிக்க போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.