பாஜக எதிரொலி: சோமனூர் பேருந்துநிலைய ஊழல் கண்டறிய ஒருநபர் கமிஷன் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு
கோவை சோமனூர் பேருந்துநிலையம் இடிந்து விழுந்ததில் ஐந்து அப்பாவி உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் நேற்று(11.09.2017) மௌன ஊர்வலம் நடத்தியது பாரதிய ஜனதா கட்சி.மேலும் மேற்கு மண்டல காவல்துறை தலைவரை தொடர்புகொண்டு பேருந்துநிலையம் கட்டிய ஊழல்வாதிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியது.
காவல்துறை தலைவர் தலைமைச்செயலகத்தை தொடர்புகொண்டு பேருந்துநிலையம் எப்போது யாரால் கட்டப்பட்டது? என்பதைக் கண்டறிவதாக உறுதியளித்தார். அதன்படி இன்று தமிழக அரசு IAS அதிகாரி சுகன்தீப் சிங் பேடி என்பவரை நியமித்துள்ளது. ஆனால் அதற்கு கொடுக்கப்பட்ட இரண்டு மாத கால அவகாசம் மிகவும் அதிகம். குற்றவாளிகளை தப்ப வைக்க காலம் கடத்தும் செயலாக விசாரணைக்கமிஷன் அமைந்துவிடக்கூடாது.
எனவே ஒருநபர் குழு கமிஷன் IAS அதிகாரி சுகன்தீப் சிங் பேடி அவர்களை பாரதிய ஜனதா நிர்வாகிகள் நேரில் சந்தித்து, விசாரணையை வேகப்படுத்த வலியுறுத்தப்படும்.