Published on 04/10/2019 | Edited on 04/10/2019
தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி,சேரன்,கவின் மற்றும் தர்ஷன் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 4 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இதனையடுத்து பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தற்போது நிலவரப்படி முகேன் முதலிடத்திலும், லாஸ்லியா இரண்டாவது இடத்திலும், சாண்டி மூன்றாவது இடத்திலும், கடைசி இடத்தில் ஷெரினும் உள்ளனர்.

இந்த நிலையில் சாண்டியின் மனைவி தனது சமூக வலைதளப்பக்கத்தில் சாண்டிக்கு ஆதரவாக வாக்களிக்கும் படி கோரிக்கை வைத்துள்ளார். அதோடு அவருக்கு வாக்களித்து வெற்றி அடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர், முகேன் டைட்டில் வின்னர் அடைவதற்கு தகுதியானவர். அவர் பன்முக திறமை கொண்டவர் என்றும் கூறியிருந்தார். இதற்கு கோபமான சாண்டியின் மனைவி, உங்களுக்கு முகேன் பிடிக்கும் என்றால் அவருக்கு வாக்கு அளியுங்கள். அதற்காக மற்றவரை குறைத்து எடைபோட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அதோடு, எப்பொழும் ஏன் ஹீரோவே ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஏன் அனைவரையும் சந்தோச படுத்தும் ஒருவர் வெற்றி பெறக் கூடாது என்றும் கேட்டுள்ளார். ஆனால் தற்போது நிலவரப்படி முகேன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்படத்தக்கது.