Published on 03/12/2022 | Edited on 03/12/2022
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக நேற்று முன்தினம் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.