Skip to main content

சிறையில் அடிப்படை வசதி; நீதிபதி நேரில் ஆய்வு!

Published on 29/04/2025 | Edited on 29/04/2025

 

 Basic facilities in prison; Judge inspects in person!

திருவள்ளூர் கிளை சிறைகளில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
 
திருவள்ளூர்  கிளை சிறைகளில் அடிப்படை வசதிகள் குறித்து, திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் கூட்டாய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் திருவள்ளூர் கிளை சிறையில் உள்ள கைதிகளுக்கு அளிக்கப்படும் குடிநீர், உணவு உள்ளிட்டவை தரமாக வழங்கப்படுகிறதா,  கழிப்பறைகள் மற்றும் சுற்றுப் புறங்கள் தூய்மையாக உள்ளதா என்பது குறித்து கைதிகளிடம் கேட்டறிந்தனர். 

மேலும் மருத்துவர்கள் வருகைப் பதிவேடு, கைதி ஒப்படைப்பு பதிவேடு, காப்பு புத்தகம், சிறை பதிவேடு, ஆயுத அறை, சமையலறை, சட்ட சேவை மையம், கைதிகளின் நேர்காணல் அறை போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
 

சார்ந்த செய்திகள்