Published on 13/08/2021 | Edited on 13/08/2021
திருச்சி கோவில்களில் தரிசனத்திற்கு மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் அமல் ஆகியுள்ளது. கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக 23ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே போல் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவில், திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை, சமயபுரம் மற்றும் கண்டோன்மெண்ட் ஐயப்பன் கோவில் ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் கோவில்கள் பூட்டி உள்ளதால் பொதுமக்கள் வெளியே நின்று தரிசனம் செய்து செல்கின்றனர்.