Skip to main content

தா.பேட்டை அரசு பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021
Awareness program held at  Government School

 

‘பாதுகாப்பும் பண்டிகையும்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி தா.பேட்டை  அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சசிகுமார் கலந்துகொண்டு பேசுகையில், “பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகம் கூடுவதால் நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. 

 

எனவே தனிமனித பாதுகாப்பை உறுதிசெய்வது நமது சமுதாய கடமையாகும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதும், மத்தாப்புகள் கொளுத்துவதும் நமது வழக்கமாக இருக்கிறது. பட்டாசு வெடிப்பதற்கான பாதுகாப்பு இல்லாமல் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உயிருக்கும் உடைமைக்கும் சேதம் ஏற்படக்கூடும். எனவே, அனைவரும் பாதுகாப்பாக பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்