பண்ணைத் தமிழ்ச்சங்கம் ஆண்டு தோறும் சிறந்த தமிழ் அறிஞர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் விருதுகளை வழங்கி கெளரவித்துவருகிறது. அந்த வகையில் இன்று (13.7.2019) மாலை சென்னை எழும்பூரில் உள்ள இக்சா அரங்கில் நிகழ இருக்கும் பண்ணைத் தமிழ்ச் சங்கத்தின் 36 ஆம் ஆண்டு தொடக்க விழாவிலும் படைப்பாளர்கள் சிலருக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கபட இருக்கிறது.
கவிக்கோ துரை வசந்தராசன் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடனுக்கு அண்ணா விருதும், மருத்துவர் ஜெய ராஜமூர்த்திக்கு வள்ளலார் விருதும், முனைவர் மலையமானுக்கு பாவாணர் விருதும், கவிஞர் ந.பாபுவுக்கு பாவேந்தர் விருதும், பெரும்புலவர் அனந்தசயனத்துக்கு மங்கலங்கிழார் விருதும், கவிஞர் சோலை தமிழினியனுக்கு ஆதித்தனார் விருதும், விதைக்காவலர் வானவனுக்கு அன்னை தெரசா விருதும் புரவலர் குமரன் அம்பிகாவுக்கு அருந்தமிழ் ஆர்வலர் விருதும் வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்ப்பணி சிகரம், கவிச்செல்வர், சொல்லின் செல்வர் ஆகிய விருதுகளும் தமிழ்ச் சான்றோர்களுக்கு வழங்கப்படுகின்றன.
முதுபெரும் பொதுவுடைமைத் தலைவர் நல்லகண்னு அவர்கள் விருதுகளை வழங்குகிறார். மாதாவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், கவிஞர் ஜீவபாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். முன்னதாக கவிதைப் போட்டியும் நடக்கிறது.
-சூர்யா