கரோனா ஊரடங்கின்போது மாதத்தவணை எனப்படும் இ.எம்.ஐ.-களை கட்டுவதிலிருந்து விலக்கு என்று ஆர்.பி.ஐ. அறிவித்தது. ஆனால் அதன்பிறகும் வங்கிகளும் தனியார் நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடம் மாதத்தவணையை வசூல் செய்தது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கு கடந்த 10ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'மாதத் தவணையின் (இ.எம்.ஐ) வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் பற்றி இரண்டு வாரங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு மீண்டும் அவகாசம் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் உயர்மட்டக்குழு ஒன்றுகூடி முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தது.
இந்நிலையில் இன்று சாலை வரி, இ.எம்.ஐ.-களுக்கான வட்டி ரத்து உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ கார் ஓட்டுநர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.