
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி அரங்கநாதசுவாமி கோயிலில் கடந்த 23.O4.2022 முதல் நாள் முழுவதும் பிரசாதம் அதிரசம், லட்டு, மைசூர்பாகு, தேன் குழல் ஆகியவற்றில் ஒன்றை கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு திங்கள் முதல் வியாழன் வரை வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண தினங்களில் சுமார் 4000 பக்தர்களுக்கும், திருவிழா காலங்கள் மற்றும் வெள்ளி சனி ஞாயிறுகளில் சுமார் 8000 பக்தர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்திற்கு நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் இதுதொடர்பாக விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த திருச்சியைச் சேர்ந்த பக்தர் ஆடிட்டர் சரவணன் என்பவர் இன்று (10.05.2022) சுமார் 5000 லட்டுகளை உபயதாரர் நன்கொடையாக ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் தன் கரங்களால் பக்தர்களுக்கு வழங்கினார். இந்தத் திட்டத்தை கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சரை கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெகுவாக பாராட்டிச் சென்றனர்.