Published on 31/01/2022 | Edited on 31/01/2022

திருச்சி தில்லைநகர் 10வது குறுக்கு சாலையில் ஈ.எஸ்.ஏ.எப். என்ற சிறு முதலீட்டு வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம்-ல் கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக அந்த வங்கியின் மேலாளர் ராமானுஜம் (39), திருச்சி தில்லை நகர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில், அங்குச் சென்று விசாரணை நடத்திய போலீசார், ஏ.டி.எம். தொடுதிரை அகற்றப்பட்டு கொள்ளை முயற்சி நடந்திருப்பதைக் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிந்து, தில்லை நகர் போலீசார் நடத்திய விசாரணையில் இந்தக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது மேல சிந்தாமணியைச் சேர்ந்த அசாரூதீன்(20) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து அசாருதீனை சிறையில் அடைத்துள்ளனர்.