அரும்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
அரும்பாக்கம் முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் முத்து (35). கூலித்தொழிலாளி. இன்று, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரயில்நகர் பகுதி ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் கொடி மரம் நடும் பணியில் முத்து நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மேலே செல்லும் மின்சார வயரில் கொடிமரம் உரசியதால் முத்து மீது மின்சாரம் பாய்ந்து, தூக்கிவீசப்பட்டார்.
மயங்கி கிடந்த முத்துவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து, மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முத்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.