
சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையானதையடுத்து நேற்று (08.02.2021) பெங்களூருவில் இருந்து புறப்பட்ட நிலையில், சசிகலாஇன்று காலை சென்னை தி.நகரில் உள்ள இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.சசிகலா விடுதலை ஆகிறார் என்று அறிவிப்பு வெளிவந்தபோதே, அதிமுக நிர்வாகிகள் சிலரும் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் அடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர். அது தொடர்பாக பல்வேறு நிர்வாகிகளை அதிமுக தலைமை கட்சியிலிருந்து நீக்கி இருந்தது. தற்போது வரை இந்தப் போஸ்டர் பரபரப்பு அடங்காத நிலையில், தற்பொழுதுதிண்டுக்கலில் அமமுகசார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பரபரப்பான போஸ்டர்திண்டுக்கல் நகர் மட்டுமல்ல மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதுஅதிமுகதரப்பு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தபோஸ்டரில் "ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!! மறக்க முடியுமா? நீங்கள் மறுக்க முடியுமா? இனிதான் வெற்றி நடை போடும் தமிழகம்" என்ற வாசகத்துடன் சசிகலா எடப்பாடி பழனிசாமி தோளைத் தட்டிக் கொடுக்கும் படமும், மற்றொருபுறம்டி.டி.வி.தினகரனுடன் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமுத்தேவர் படத்துடன் கட்சி பொறுப்பாளர்கள் படமும்இடம்பெற்றுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒட்டியுள்ள இந்தப் போஸ்டரை ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பரபரப்பாக நின்று பார்த்து ரசித்துவிட்டு போய் வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)