பாப்பிரெட்டிப்பட்டி அருகே, அலோபதி முறையில் சிகிச்சை அளித்த ஹோமியோபதி பெண் மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கடசமுத்திரத்தில் எம்.பி.பி.எஸ். படிக்காத பெண் ஒருவர், ஆங்கில முறையில் மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சந்தேகத்திற்குரிய பெண்ணைப் பிடித்து விசாரித்தபோது, அவருடைய பெயர் தேவி (42), பி.ஹெச்.எம்.எஸ். படித்துவிட்டு, தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்ததும், அவர் அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.
ஹோமியோபதி, சித்த மருத்துவம் படித்தவர்கள் அலோபதி முறையில் சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி தேவி, சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதையடுத்து சுகாதாரத்துறையினர் அவரை பிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.