திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் புதூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் அரவிந்த். இவர் அதே ஊரை சேர்ந்த பாலூர் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணான ஆயிஷா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்கிற இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார்.
துரத்தி துரத்தி காதல் செய்ய ஒருக்கட்டத்தில் அந்த பெண்ணும், அரவிந்தனின் காதல் வலையில் வீழ்ந்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஒருக்கட்டத்தில் காதலர்கள் திருமணத்துக்கு முன்பே அத்துமீறியுள்ளனர். உன்னை தான் நான் திருமணம் செய்துக்கொள்வன் என ஆசைவார்த்தி கூறி அந்த பெண்ணிடம் அரவிந்த் அத்துமீறி நடந்துள்ளான்.
இந்நிலையில் அந்த பெண் எனக்கு வேண்டாம் என ஒதுங்கியுள்ளான். அந்த பெண்ணை விலக நினைத்தாலும் விட்டு விலக முடியாத அளவுக்கு மாறியுள்ளது. அதாவது அந்த 17 வயது இளம்பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இதனை கூறி தன்னை திருமணம் செய்துக்கொள்ளச்சொல்லி வற்புறுத்தியும் அந்த இளைஞன் மறுத்துள்ளான்.
இதுதொடர்பாக அந்த பெண் மற்றும் குடும்பத்தார் ஆம்பூர் தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் தந்தனர். புகாரை வாங்கி போலீஸார், அந்த இளைஞரை அழைத்து பேசியும் முடியாது என்றார். அதற்கு காரணமாக நான் இந்து மதம், அந்த பெண் இஸ்லாமிய மதம் என காரணம் கூறியுள்ளார். காதலிக்கும்போது தெரியவில்லையா என கேள்வி எழுப்ப பதில் சொல்லாமல் இருந்துள்ளான். அதோடு, காவல்நிலையத்தில் புகார் அளித்ததை திரும்பப் பெறவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளான் அரவிந்தன்.
17 வயது சிறுமி என்பதால், நம்பிக்கை மோசடி, நம்பிக்கை தந்து கர்ப்பாக்கியது உட்பட போக்சோ சட்டத்தின் கீழ் கைது அரவிந்தனை செய்து ஆம்பூர் கிராமிய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டவர்கள், வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.