ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஒரு சில கிராமங்களில் உள்ளூர் இளைஞர்களின் முயற்சியால் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆசிரியர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துவதைவிட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்வதுடன் அந்த இடங்களை காலிப்பணியிடமாக அறிவித்து வருகிறது.

>
இந்த நிலையில் அரசு பள்ளிகளை இயக்க மாதம் ரூ. 10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சி முடித்த இளைஞர்கள் விண்ணப்பங்கள் கொடுத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 27 ந் தேதி மாலை வரை 5700 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பத்துடன் சென்று கொடுத்துள்ளனர். இதில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை என்றாலும் அனைவருக்கும் பணி வாய்ப்பு வழக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.