நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து இருப்பது சமீபத்தில் தெரியவந்ததின்மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை சிபிசிஐடினர் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த மாணவன் உதித்சூர்யா அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் மோசடி செய்யப்பட்டது முதலில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து உதித்சூர்யா டாக்டர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்ட பிறகு நீட் முறைகேடு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது. அந்த இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல மாணவர்களுக்கு நீட் ஆள்மாறாட்டத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது இதை அடுத்து பிரவீன், ராகுல் ஆகிய இரு மாணவர்களும் அவர்களது தந்தைகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்னொரு மாணவரான இர்பான் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டார். இர்பான் கோர்ட்டில் சரணடைந்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதுபோல் சென்னையை சேர்ந்த மாணவி அபிராமியை சிபிசிஐடி போலீஸ் சிக்கினார். அவரது புகைப்படத்தில் சந்தேகம் எழுந்ததால் அபிராமியை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டு உடனடியாக உறுதி செய்யப்படவில்லை அதையடுத்து அவரது புகைப்படங்களை போலீசார் தடவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளனர். இதன் முடிவுகள் வந்த பின்னரே அபிராமி கைது செய்யப்படுவாரா என்பது பற்றி சிபிசிஐடி முடிவு எடுக்க உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் சென்னை கல்லூரியில் படித்து வந்த மேலும் ஒரு மாணவி சிக்கியுள்ளார். அவரது பெயர் பிரியங்கா தர்மபுரியை சேர்ந்த அவர் சென்னை அருகே உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். நீட் முறைகேட்டுக்கு பிறகு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின்போது தான் மாணவி பிரியங்கா மதிப்பெண் சான்றிதழ்களை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி மருத்துவ கல்லூரி சார்பில் சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து சென்னை சிபிசிஐடி போலீசார் மாணவி பிரியங்காவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது தாய் மைனாவதி யுடன் சேர்ந்து மதிப்பெண்களை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மாணவி பிரியங்காவையும் தாய் மைனாவதியும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து தேனிக்கு அழைத்து வந்து விடிய விடிய அதிரடி விசாரணை செய்தனர். அதில் மதிப்பெண்களை நிறுத்தியது மட்டுமல்லாமல் மாணவி பிரியங்கா அதற்காக வேறு ஒரு மாணவி தேர்வு எழுத வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து மாணவி பிரியங்காவையும் தாயையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர். ஏற்கனவே நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் நான்கு மாணவர்கள் அவர்களது தந்தைகள் என எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்முறையாக நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஒரு மாணவி கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று தேனி கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த மாணவர்கள் பிரவீன், ராகுல் மற்றும் அவரது தந்தை சரவணன், டேவிஸ் அவரது மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பன்னீர்செல்வம் கூறும்போது..
இந்த வழக்கில் புகார்தாரர் யார் என இதுவரை கண்டறியப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு கமிட்டி உறுப்பினர்களை ஏன் விசாரணைக்கு உட்படுத்தவில்லை புரோக்கர் ரசீதை ஏன் இன்னும் கைது செய்யவில்லை. மாணவர் பிரவீன் படித்த கல்லூரி தேனி மருத்துவக் கல்லூரியில் ஆவணம் முறைகேட்டிற்கு துணை போனது யார் என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சிபிசிஐடி போலீசார், புரோக்கர் அரசு ரசீதை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள் என்று தெரிவித்தனர். கல்லூரிகளில் முறைகேடு நடத்தியவர்கள் அவற்றை கண்டறிந்து விசாரணைக்குழு அலுவலர்கள், முதல்வர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிற 14-ம் தேதி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்வதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் நான்கு பேரையும் நீதிமன்ற காவலில் வருகிற 25ஆம் தேதி வரை நீடிக்க உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள புரோக்கர்கள் ரசீது மற்றும் வேதாச்சலம் ஆகியோர் பிடிபட்டால் மட்டுமே இந்த நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சிக்குவார்கள் என தெரிகிறது.