மலையை அண்ணாமலையராக வணங்குவது திருவண்ணாமலையில் தான். தினம் தினம் திருவண்ணா மலைக்கு வரும் பக்தர்கள், 14.கி.மீ சுற்றளவுள்ள மலையை பக்தர்கள் வலம் வந்தாலும் மாதந்தோறும் வரும் பௌர்ணமியன்று மட்டும் சுமார் 4 முதல் 5 லட்சம் மக்கள் கிரிவலம் வருகின்றனர்.
பௌர்மணி நேரம் என்பது ஒவ்வொரு மாதமும் இரட்டை நாளாக வருகிறது. அதனால் ஒவ்வொரு பௌர்ணமிக்கு முன்பாக அண்ணாமலையார் கோயில் சார்பாக அதிகாரபூர்வமாக கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கின்றனர். அதன்படி இந்த மாதம் வைகாசி மாத பௌர்மணி மே 17ந்தேதி விடியற்காலை 4.05 மணிக்கு தொடங்கி மே 18ந்தேதி விடியற்காலை 3.45 முடிகிறது என்றும், அதனால் பக்தர்கள் மே 17ந்தேதி இரவு கிரிவலம் வருவது சிறந்தது என அறிவித்துள்ளனர்.
மே மாதம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் போலிஸார் அதிகளவில் பாதுகாப்பில் ஈடுப்படுத்த முடிவு செய்துள்ளார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தி.