அண்ணாமலை பல்கலை ஊழியர் சங்கம்
காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆசிரியர்கள் . ஊழியர்கள் சங்கத்தினர் இறுதி எச்சரிக்கை விடுத்து ஊழியர் சங்க தலைவர் மனோகரன் மற்றும் பொது செயலாளர் பழனிவேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், பல்கலைக்கழக ஊழியர்களுக்கான பதவி உயர்வு பணப் பயன்கள் பல ஆண்டாக வழங்கப்படவில்லை. கோரிக்கைகளை பலமுறை வலியுறுத்தியும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை எனவும், பணி நிறைவு பெற்றவர்களுக்கு பணப்பயன்கள் வழங்கவில்லை.
பணி நிரவலில் சென்றவர்கள் குறைகளை களையவும், தமிழக அரசு பல்கலைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் அக்டோபர் 22ந் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் அதன் பின்னர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆசிரியர் ஊழியர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- காளிதாஸ்