அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் எம்.இ. பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு மூலமாக மாணவர்களை தேர்வுசெய்து வந்த நிலையில் தற்போது இதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
டான் சென்ட் கட் ஆப் என்பதை தமிழகத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் தரவரிசை பட்டியலின் படி கட் ஆஃப் அடிப்படையில் மதிப்பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு,டான் செட் கவுன்சி லிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். அப்படி அழைக்கப்படும் மாணவர்கள் தனக்கு தேவையான கல்லூரியை தேர்வு செய்து கொள்வார்கள் .
இந்த நிலையில் எம்.இ பொறியியல் படிப்புக்காக அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் டான் சென்ட் மூலமாக மாணவர்களை தேர்வு செய்து கொடுப்பார்கள். அதே போல ஐ.ஐ.டி நிறுவனமான கேட் மூலம் தேர்வுசெய்து கொடுப்பார்கள். இதில் டான் சென்ட் தேர்வு போக மீதமுள்ள இடத்திற்கு கேட் மூலம் வருகின்ற மாணவர்கசேர்க்கைக்கு அழைப்பார்கள். ஆனால் தற்போது அது உல்டாவாக மாறியுள்ளது.
கவுன்சிலிங்கில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்சென்ட் நீக்கப்பட்டு மத்திய அரசு நடத்தும் கேட் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று வருபவர்கள் போக மீதமிருந்தால் இந்த அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வு செய்த மாணவர்களுக்கு கொடுக்கப்படும். அண்ணாபல்கலைக்கழத்தின் கீழ் படிக்கும் மாணவர்களின் கல்வியும், ஐ.ஐ.டி படிக்கும் மாணவர்களின் கல்வியின் தரம் வேவ்வேறானவை இப்படி இருக்கும் நிலையில் கேட் மூலமாக தேர்வு செய்யப்படுவர்கள் குறைவாகவே இருப்பார்கள், அதிலும் குறிப்பாக தாங்கள் விரும்பிய கல்லூரியில் பயிலமுடியாது முழுமைாக நீட்டை போன்று இதிலும் கையாண்டுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய மாணவர்கள் எம்.இ பொறியியல் படிப்புக்கான இரண்டுமாதங்களுக்கு முன்பாகவே டான்சென்ட் மூலமாக தேர்வு எழுதியுள்ளோம். அதற்கான தரப்பட்டிலை 22.08.19 தேதி வியாழன் கிழமை அன்று வெளியிட்டுள்ளனர். ஆனால் இது மூலமாக எந்த பயனுமில்லை தமிழக கல்லூரியில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை கிடையாது, என்பது முழுமையாக அநீதி என்றனர்.