மாணவி அனிதாவிற்கு நீதிவேண்டும்
வேதாரன்யம் வழக்கறிஞர்கள் போராட்டம்!
மாணவி அனிதாவின் இறப்பிற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்கவேண்டும் என வேதாரன்யம் வழக்கறிஞர்கள் நீதிமன்றப்புறக்கனிப்பு செய்து போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம் வேதாரன்யம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் மருத்துவ மாணவி அனிதாவின் இறப்புக்கு நீதி வேண்டும், அவரின் இறப்பிற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்கவேண்டும் என நீதிமன்ற வாயிலில் போராட்டம் செய்தனர். போராட்டத்தில், "தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக மத்திய அரசு பறித்துவருகிறது.
உரிமையை நிலைநாட்டவேண்டிய மாநில அரசு மோடி அரசிடம் பதவி சுகத்திற்காக சுயமரியாதையை அடமானம் வைத்துவிட்டு மண்டியிட்டு கிடக்கிறது, காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியே நடந்தாலும் அவர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத்திற்கு எதிராகவும் நிற்கிறது மத்திய மோடி அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை துச்சமாக என்னி புறந்தள்ளி தமிழகத்தின் நீர் ஆதரத்திற்கு வேட்டுவைக்கிறது மத்திய அரசு.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதையெல்லாம் எதிர்த்தாரோ அதையெல்லாம் அவரது பெயரை சொல்லி ஆட்சி செய்யும் எடப்பாடி அரசு மண்டியிட்டு, சிவப்புகம்பளம் விரித்து அனுமதிக்கிறது. உயிர் உள்ளவரை நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்காமல் இருந்தார் ஜெயலலிதா. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களின் சுயநலத்தினால் அனிதா என்கிற அப்பாவி குழந்தையின் உயிர் போயிருக்கிறது.
எனவே இனி ஆளுபவர்களை நம்பி பயனில்லை மயிலே மயிலே என்றால் இறகு போடாது பிடுங்கனும், நமது உரிமைகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்காக எப்படி போராடினோமோ அது போல் தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்சினைக்காகவும் அனைவரும் சாதிகடந்து மதம் கடந்து போராடவேண்டும், போராட்டம் மட்டுமே நமது உரிமைக்கான தீர்வு ". என்று பேசினார் வழக்கறிஞர் பாரி.
- க.செல்வகுமார்