Skip to main content

ஜோதிடரை அணுகிய புஸ்ஸி ஆனந்த்?; தள்ளிப்போகிறதா தவெக மாநாடு?   

Published on 02/09/2024 | Edited on 02/09/2024
 Anand approached an astrologer; Is the tvk conference postponed?

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அண்மையில் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம் அதுவரை கட்சியினர் கட்சிக் கொடியை முறையாக அனுமதி பெற்று ஏற்றிக் கொண்டாடுங்கள் என விஜய் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து செப்.23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாகவும் அதற்காக பாதுகாப்பு மற்றும் அனுமதியை த.வெ.க கோரியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டிற்கான அனுமதிகோரி கடந்த 28 ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். புஸ்ஸி ஆனந்த் எஸ்.பி அலுவலகத்தில் மனுகொடுக்க சென்ற பொழுது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இல்லை. அதனால் அவருக்கு அடுத்தகட்டமாக உள்ள அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டு இருந்தது. தமிழக வெற்றிக் கழகம் கொடுத்த மனு தொடர்ந்து பரிசீலனையில் இருப்பதாக விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட காவல் ஆணையர் தீபக் சிவாச் விடுமுறையில் இருப்பதால் முடிவெடுப்பதில் தாமதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விடுமுறை முடிந்து இன்று விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் பணிக்கு திரும்பிய பிறகு மாநாட்டிற்கு அனுமதி கிடைப்பது தொடர்பான தகவல் தெரிய வரும் என தகவல்கள் வெளியாகி இருந்தது.

nn

இந்நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு தேதி மாற்றம் தொடர்பாக விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அணுகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் 23ஆம் தேதி ஒருவேளை அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் மாற்றுத் தேதியைக் குறிப்பதற்காக இந்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தாமதம் ஏற்பட்டால் மாற்றுத் தேதியை தற்போதே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால் விஜய்யின் ஆரம்பக்காலம் முதல் ஆஸ்தான ஜோதிடராக உள்ள கடலூரை சேர்ந்த சந்திரசேகர் என்பவரை ஆனந்த் சந்தித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அக்டோபர், நவம்பர் மழைக்காலம் என்பதால் அந்த மாதங்களில் மாநாடு நடத்துவது உகந்தது இல்லை என முடிவு செய்துள்ள விஜய், ஒருவேளை தள்ளிப் போட்டால் ஜனவரியில் மாநாடு நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்