Skip to main content

தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமனம்!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

Amutha IAS appointed Tamil Nadu Rural Development Secretary

 

1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அமுதா, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக இருந்த  நிலையில் அண்மையில் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்குத் திரும்ப மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளராக கோபால், நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சந்தீப் சக்சேனா, நிதித்துறை முதன்மைச் செயலாளராக முருகானந்தம்,தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளராகக் கிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் தடைகளைத் தகர்த்து சாதித்தவர் எனப் பெயர் பெற்றவர் அமுதா. சந்தனக் கடத்தல் வீரப்பன் சுதந்திரமாக உலவிய காலகட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் சார் ஆட்சியராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ்., அடர்ந்த காடுகளுக்குச் சென்று உள்ளூர் மக்களைச் சந்தித்ததன் மூலம் கவனம் ஈர்த்தவர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமுதா, சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்துப் பலரது பாராட்டையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்