Skip to main content

விருந்து கொடுக்கும் அமித்ஷா... டெல்லி செல்லும் எடப்பாடி...

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

இந்தியா முழுவதும் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று முடிந்தது. இதற்கான கடைசி கட்ட மக்களவை தேர்தல் நேற்று (19/05/2019) நடந்து முடிந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியான நிலையில் நாளை தமிழக  முதல்வர் பழனிச்சாமி டெல்லி செல்வதாக தகவல்கள் வந்துள்ளன.

 

Amit Shah giving party....eps going to Delhi

 

அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜக, நாளை தனது கூட்டணி கட்சிகளுக்கு அக்கட்சியின் தலைவர் அமித்ஷா அளிக்கும் விருந்து மற்றும் ஆலோசனைகூட்டம் நடக்கவிருக்கிறது. அக்கூட்டத்தில் கலந்துகொள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்