தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நீர்வரத்து மற்றும் மழைப்பொழிவு காரணமாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நேற்று மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீர் வரத்து சீரானதைத் தொடர்ந்து தற்பொழுது அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு நாள் மற்றும் சபரிமலை சீசன் காரணமாக குற்றாலத்தில் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் பக்தர்கள் குவிந்து வருகின்றனர் இந்நிலையில் குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு நாள் என்பதால் சுற்றுலாத் தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் அதிகமாகக் கூடி வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சூறைக்காற்று வீசுவதோடு கடலில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.