Published on 11/11/2018 | Edited on 11/11/2018

மறு உத்தரவு வரும் வரை அனைத்து கடலோர மாவட்டங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக மீனவர்களை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மறு உத்தரவு வரும் வரை அனைத்து மாவட்ட கடலோர மாவட்டங்களிலும் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.