Published on 24/12/2019 | Edited on 24/12/2019
சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் சிதம்பரம் நகரை சேர்ந்த நடராஜன்(50) என்பவர் அரசு மதுபான பாட்டில் மற்றும் விஷ சாரயம் விற்று வந்துள்ளார். இதனையறிந்த சிதம்பரம் தாலுக்கா காவல் ஆய்வாளர் வினாயகமூர்த்தி, உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விஷ சாரயம் விற்ற நடராஜனை மடக்கி பிடித்தனர்.
![Alcohol salesman arrested near Chidambaram](http://image.nakkheeran.in/cdn/farfuture/5j3o-YHABJUp7Fo-pR6AMvCBZeaOyUiqXrwc8kCVTS0/1577178920/sites/default/files/inline-images/11_85.jpg)
அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 10லிட்டர் அளவு கொண்ட 10 கேன்களில் விஷ சாரயம், 150 பாட்டில் அரசு மதுபான பாட்டில் மற்றும் ரூ.47 ஆயிரம் முதலியவற்றை பறிமுதல் செய்தனர். இது உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.