சென்னை மாநகரின் காற்று மாசுபாட்டை தடுத்து நிறுத்துவோம் என்று பசுமை தாயகம் சார்பில் சென்னையில் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.
சாலைகளில் படிந்துள்ள புழுதியை அகற்ற வேண்டும். வாகனப் புகையை கட்டுப்படுத்த வேண்டும். அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக ஆக்க வேண்டும். குப்பை மேலாண்மை விதிகளை செயலாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்னாள் மத்திய இணையச்சர் ஏ.கே.மூர்த்தி துண்டரிக்கைகளை விநியோகம் செய்தார்.
அப்போது பேசிய அவர், காற்று மாசுபாடு ஒரு மிகப்பெரிய உயிர்க்கொல்லி. இதனால் உலகில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் இயந்து போகின்றனர். உலகிலேயே மிகவும் மாசுபட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் மிகவும் மாசுபட்ட முதன்மை நகரங்களில் சென்னை மாநகரமும் ஒன்றாகும். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டி அளவைவிட சுமார் 6 மடங்கு கூடுதலாக சென்னை நகரின் காற்று மாசுபட்டுள்ளது.
சென்னை மாநகரின் காற்று மாசுபாட்டிற்கு வாகனங்கள் எண்ணிக்கை அதிகமானதுதான் முதன்மை காரணம். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு 20 லட்சம் வாகனங்கள் ஓடிய சென்னை நகரில் தற்போது 54 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன.
சென்னையில் ஓடும் வாகனங்களில் கணிசமானவை காற்று மாசுபாடு விதிகளை கிடைபிடிப்பதுஇல்லை. அரசாங்கம் அதனை கண்காணிப்பதும் இல்லை. கட்டுப்படுத்துவதும் இல்லை.
சென்னை நகரின் சாலைகளிலும், தெருக்களிலும் படிந்துள்ள புழுதி காற்று மாசுபாட்டிற்கு மிக முதன்மையான காரணம் ஆகும். தரமில்லாத, பராமரிப்பு இல்லாத சாலை, சாலையோரம் கொட்டப்படும் குப்பை, கட்டட கழிவுகள், மின்சாரம், சாக்கடை என பல காரணங்களுக்காக தோண்டப்படும் குழிகள் ஆகியவற்றால் சென்னை நகரம் புழுதி நகரமாகிவிட்டது என்றார்.