Skip to main content

பாஜகவின் ஏஜென்ட் அசாதுதீன் ஒவைசி- காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு குற்றச்சாட்டு!

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

ஜார்கண்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்திற்கு வாணியம்பாடியில் ஒரு கூட்டத்தை போட்டு இந்து முஸ்லீம் மக்களிடையே வன்முறையை தூண்ட வேண்டாம், நீங்கள் பேசிய பேச்சை திரும்ப பெறுங்கள் என ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவருக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவின் மாநில தலைவர் அஸ்லம் பாஷா. இது பற்றி அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி பாரதிய ஜனதா கட்சிக்கு ஏஜென்டாக  செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பீகாரில் தேர்தலில் நிற்கும் பொழுது அங்கு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக தனது வேட்பாளரை நிறுத்தினார். இதனால் மற்ற கட்சி வேட்பாளர்கள் தோற்று பாஜக வேட்பாளரை வெற்றி பெற செய்தார். உத்தரபிரதேசத்தை எடுத்துக்கொண்டால் அங்கு போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியர் நிற்கிறார். அங்கு காங்கிரஸ் கட்சியும் ஒரு இஸ்லாமியரை நிறுத்துகிறது. அந்த இடத்தில் இருவரில் ஒருவர் வெற்றி பெறும் நிலையிலேயே இஸ்லாமிய வாக்கு வங்கியிருந்தது. அந்த சட்டமன்ற தொகுதியில் இவர் ஒரு வேட்பாளரை நிறுத்துகிறார். தன் கட்சி வேட்பாளர் வெற்றி பெற முடியாது என தெரிந்தே நிறுத்துகிறார். மூன்று இஸ்லாமிய வேட்பாளர்களும் தோற்று பாஜக நிறுத்திய ஒரு இந்து வேட்பாளர் வெற்றி பெறுகிறார். பாஜக வாங்கிய வாக்கு வித்தியாசம் உவைசி கட்சி வேட்பாளர் வாங்கிய ஒட்டு தான். 

 

 

இவர் இஸ்லாமின் பெயரால் இஸ்லாம் மார்க்கத்தின் பெயரால் அரசியல் செய்வது, பாரதிய ஜனதா கட்சிக்கும் இவருக்கும் பெரும் வித்தியாசம் கிடையாது. இருவரும் மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்யக்கூடியவர்கள். இது இந்திய தேசத்திற்கு ஆபத்தானது. தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் அவர் கூட்டத்தில் இது போன்ற வன்முறை ஏற்படக் கூடிய வார்த்தைகள் ஹிந்து முஸ்லீம்களிடையே வேற்றுமையை திணிக்கின்ற அந்த வார்த்தைகளை பேசியுள்ளார். சமீபத்தில், ஜார்கண்டில் நடைபெற்ற சம்பவத்திற்காக தமிழகத்தில் வாணியம்பாடியில் ஒரு கூட்டத்தை கூட்டி ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னாள் காலை வெட்டுவேன் கையை வெட்டுவேன் என்று கூறி வெள்ளை மனசு கொண்ட இந்துக்கள் மீது இது போன்ற பேச்சுக்களை பேசி வேற்றுமை உருவாக்க வேண்டாம். உங்களுக்கு திராணி இருந்தால் ஜார்கண்டில் ஒரு பொதுக் கூட்டத்தை கூட்டி உங்கள் நியாயத்தை வெளிப்படுத்துங்கள். அதற்காக நாங்கள் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல வைத்த இந்துத்துவா மக்களுக்கு ஆதரவாக நான் பேசவில்லை நாங்கள் அவர்களை எதிர்க்கிறோம். காங்கிரஸ் கட்சி எப்போதும் மதசார்பற்ற ஒரு கட்சி என்பதை இங்கு தெளிவுப்படுத்துகிறேன். 

 

aimim party president asaduddin owaisi bjp support congress said

 

 


உவைசி பேசிய அந்த வார்த்தைகளை அவர் திரும்ப பெற வேண்டும். இது போன்ற பேச்சுக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்து முஸ்லீம்களை பொருத்தவரையில் இந்தியாவில் அவர்கள் பகவத் கீதையின் மகாபாரத்தில் உடைய சம்பவங்களை அடிப்படையாக வைத்து வாழ்க்கை நடத்திக் கொண்டு இருப்பவர்கள் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள். தமிழகத்தில் இந்து முஸ்லீம் இரு சமுதாயத்தினரும் ஒரு தாய் பிள்ளைகளாக நட்புடன் வாழ்ந்து வரும் இந்த சூழலில் உவைசி வன்முறை பேச்சுகளை பேசி வன்முறைக் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். தற்போது அவர் இங்கு வந்து பேசியதன் நோக்கமே, நாடாளுமன்ற தேர்தல் வேலூர் தொகுதியில்  நடைபெறவுள்ளது. இங்கு இந்து - முஸ்லீம் பிரச்சனையை உருவாக்கி இந்துக்கள் வாக்குகளை மொத்தமாக பாஜக கூட்டணிக்கு செல்வதற்காக ஒவைசி பாஜகவுக்கு சாதகமாக பேசினாரோ என சந்தேகப்பட வேண்டியுள்ளது என்றார். 

 

 


காங்கிரஸ் எதிர்ப்பது நரேந்திரமோடியை ஏனென்று சொன்னால், நரேந்திர மோடி இந்திய கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டு இந்துத்துவா கொள்கையை கடைபிடிக்க கூடியவர். இந்துத்துவாவை மக்களிடையே திணிக்க முயற்சிக்கிறார். அதனால்தான், நாங்கள் எல்லாம் அவரை  எதிர்க்கின்றோம். கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் கூட்டணி வைத்திருந்த ஒவைசி பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மாற்று அரசியலை உருவாக்க மூன்றாவது அணியை உருவாக்குவேன் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. பாஜக போன்று மத அடிப்படையில் அரசியல் செய்பவர் தான் இந்த உவைசி எனவே காங்கிரஸ் கட்சி இவரை எதிர்க்கும் என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்