தமிழக அரசு குறித்து பாஜக தலைவர்கள் அவதூறாக பேசி வருவதை நிறுத்தி கொள்ளாவிட்டால் அதிமுகவினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்தில் 58 லட்சம் மாணவர்கள் முட்டை சாப்பிடுகிறார்கள். முட்டை நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்தது குறித்து வருமானவரித்துறை சோதனை செய்கிறார்கள் என்றால், அதற்கு முட்டை கொள்முதலில் ஊழல் என்று எப்படி சொல்ல முடியும்?. எனவே இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை.
தேவையில்லாமல் இது போன்ற குற்றச்சாட்டை மாநில அரசு மீது சுமத்துவது மத்தியில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. எனவே இதோடு அவர்கள் பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதிமுக தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தார்கள் என்றால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.