அதிமுக தலைமை அலுவலகம் முன்பு தினகரன், சசிகலா உருவப்படங்கள் எரிப்பு
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் உள்ளே நடந்து கொண்டிருந்தபோது வெளியே அக்கட்சியின் தொண்டர்கள் டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரின் உருவப்படங்களை எரித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
படங்கள்: எஸ்.பி.சுந்தர்