Published on 05/09/2020 | Edited on 05/09/2020

திரையரங்குகளை மீண்டும் திறப்பது தொடர்பான மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்திற்கு, தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை மீண்டும் திறப்பது தொடர்பான ஆலோசனை வருகிற 8 -ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு, திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெற உள்ள நிலையில் தமிழக திரையரங்கு உரிமையாளர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.