Published on 11/09/2020 | Edited on 11/09/2020

பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் குன்னம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க, எம்.எல்.ஏவாகவும் உள்ளவர் ராமச்சந்திரன். சில தினங்களுக்கு முன்பு இவரது தாயாருக்கு கரோனா வைரஸ் தோற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் ராமச்சந்திரனுக்கும் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதையடுத்து அவர் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள கொச்சி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே இவர் கிட்னி ஆப்ரேஷன் செய்துகொண்டவர், இவர் உடல்நிலை பாதிக்கப்படும் போதெல்லாம் அவ்வப்போது கேரளா சென்று சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவரது கட்சியினர் கூறுகின்றனர்.