Skip to main content

கோயம்பேடு மார்கெட் மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Published on 03/05/2020 | Edited on 03/05/2020

 

 

  ADMK minister rp uthayakumar about Koyambedu market corona impact

 

இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு பிறப்பித்து, சமூக இடைவெளியை முறையாக கடைபிடியுங்கள் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்திய போதிலும், 30% மக்கள் அதை அலட்சியம் செய்தது, தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்வதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகும் கூட சமூக இடைவெளியின்றி கோயம்பேடு மார்கெட்டில் தொடர்ந்து கூட்டம் அலைமோதியது. இதன் எதிரொலியாக தற்போது சென்னை கோயம்பேடு மார்கெட்டுடன் தொடர்புடைய 119 பேருக்கு தற்போது கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கோயம்பேடு மார்கெட் நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் கோயம்பேடு மார்கெட் மூலம் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் மற்ற மாநிலத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்