Skip to main content

பிரஷாந்த் கிஷோருக்கு கொடுத்த ரூ.350 கோடி பணம் யாருடையது? - கே.டி.ராஜேந்திர பாலாஜி கேள்வி

Published on 07/12/2020 | Edited on 07/12/2020

 

admk minister rajendrabalaji

 

விருதுநகர் மாவட்டம் முழுவதும், திமுகவினரும் அதிமுகவினரும் கொடி பிடித்து, போராட்டம் நடத்தி, கற்களை வீசி, செருப்புகளை எறிந்து, மோதிக்கொண்டிருக்க.. காவல்துறையினர் தடியடி நடத்தி, விரட்டி விரட்டி திமுகவினரைக் கைதுசெய்து மண்டபங்களில் அடைக்க.. இத்தனைக்கும் காரணகர்த்தாவான அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விஜயகரிசல்குளம் என்ற கிராமத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினையும், ஆ.ராசாவையும் வாய்க்கு வந்தபடி கலாய்த்து காமெடி பண்ணினார். அவரது பேட்டி இதோ -  

 

“ஸ்டாலினுக்கு எதிராக நான் பேசினால், பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொல்கிறாரா? பின்விளைவோ, முன்விளைவோ, எந்த விளைவானாலும் சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன். எடப்பாடியாரை ஊழல் நாயகன் என்று சொல்லும் மு.க.ஸ்டாலின், கருவிலேயே ஊழல் நாயகன். ஸ்டாலினுடைய சொத்துக் கணக்கைப் பட்டியலிடச் சொல்லிவிட்டோம். திமுகவுக்கு சகுனம் சரியில்லை.  ஸ்டாலின் ஒருக்காலும் முதலமைச்சராக முடியாது. அநாகரீகமாகப் பேசியது யார்? எங்கள் தலைவர்களைப் பற்றி பேசினால், தொண்டர்கள் நாங்கள்தான் கேட்போம். முதலமைச்சர் ஆகிவிடுவோம் என்ற திமிரா? ஸ்டாலினுடைய திமிரை ஒடுக்குவதுதான் எங்கள் வேலை. 

 

எல்லாரையும் கலெக்‌ஷன்.. கரப்ஷன்னு சொல்லுறாரு. தன்னை விளம்பரப்படுத்துவதற்கு 350 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். இது அவருடைய சொந்தப் பணமா? அவருடைய குடும்பம் சம்பாதித்த பணமா? ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தில் 350 கோடி ரூபாய் பிரசாந்த் கிஷோருக்கு கொடுத்திருக்கிறார்கள்.  தமிழ்நாட்டில் வேஷம்போடுவதற்காக. 

 

எடப்பாடியாரையோ, ஓ.பி.எஸ்.ஸையோ தரமில்லாமல் ஸ்டாலினோ, ஆ.ராசாவோ, தி.மு.க கட்சியில் யார் பேசினாலும், இதைவிட கேவலமாகப் பதிலடி கொடுப்பேன். நாங்கள் ஆ.ராசா மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினால் தாராளமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரட்டும். 1972-ல் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது, எல்லா அடக்குமுறைகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்துத்தான் கட்சியை நடத்தினார். ஒன்றரை கோடி அ.தி.மு.க தொண்டர்களும் இரும்பு மனிதர்களாக இருக்கிறார்கள். தொண்டர்களை மீறி, எடப்பாடியாரையோ, ஓ.பி.எஸ்.ஸையோ தொடமுடியாது. இந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி வரைமுறையில்லாமல் பேசமாட்டான். எந்தத் தாயையும் மதிக்கக்கூடியவன் நான். 

 

தயாளு அம்மாளை என்றைக்காவது குறைத்துப் பேசியிருக்கின்றேனா? ராசாத்தியம்மாளை என்றைக்காவது பேசியிருக்கின்றேனா? இறந்ததற்குப் பிறகு கலைஞரை மரியாதை இல்லாமல் பேசியிருக்கிறோமா? எங்கள் தலைவியை ‘ஆத்தா’ அது இதுவென்று என்னென்ன வார்த்தை? ஜனநாயக நாடாக இருப்பதால் பேசாமல் இருக்கிறோம். மந்திரியாக இருப்பதால் மாண்பு கருதி பேசாமல் இருக்கிறோம். எடப்பாடியாரும் ஓ.பி.எஸ்.ஸும் எங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அம்மாவை தரமில்லாமல் பேசுகிறார். முதலமைச்சர் எடப்பாடியாரை தரமில்லாமல் பேசுகிறார். என்ன குறை கண்டார்கள், இந்த ஆட்சியில்? தி.மு.க ஆட்சியில் என்ன செய்தார்கள்? அவர்கள் குடும்பத்தை வளர்ப்பதற்காக, பத்து மந்திரிகள் கேட்டு டெல்லிக்குப் போனார்கள். பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக நல்ல வளமான துறையைக் கேட்பார்கள். நீர்ப்பாசனத் துறையைக் கேட்கவில்லை. 

 

cnc

 

நீர்ப்பாசனத்துறை என்றால் காவிரி பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும். அதை விட்டுவிட்டு, தகவல் தொழில்நுட்பத் துறையைக் கேட்டார்கள். அதில்தானே அலைவரிசை ஊழல் பண்ணினார்கள். ஆ.ராசா ஊழல் பண்ணுனாரா? இல்லையா? ஆ.ராசாவை பிடரியைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனது தமிழ்நாடு போலீ்ஸா? காங்கிரஸின் மன்மோகன்சிங் அரசுதானே அரெஸ்ட் பண்ணிக் கொண்டுபோனது. திகார் ஜெயிலில் அடைஞ்சு கிடந்தது யாரு? ராசாதானே? ஆ.ராசா.. நீங்கள் பேசக்கூடாது. உங்கள் பக்கம் அழுக்கை வைத்துக்கொண்டு, எங்கள் பக்கம் திரும்பாதீர்கள்.

 

அதிமுகவில் உள்ளவர்களை, கைபடாத ரோஜாக்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. எங்கள் இயக்கத்தில் எங்கோ ஒரு இடத்தில் தவறு நடக்கும். அந்தத் தவறுகள் தலைவர்களால் கண்டிக்கப்படும். தவறுகள் திருத்திக் கொள்ளப்படும். ஆனால், தி.மு.க அழுகிப்போன தக்காளி; கூட்டுக்கும் உதவாது; குழம்புக்கும் ஆகாது. எங்கள் தலைவர்களை மரியாதையோடு விமர்சனம் செய்தால், நாங்களும் மரியாதையோடு விமர்சனம் பண்ணுவோம். நீங்கள் தரம்தாழ்ந்து பேசினால், நாங்களும் தரம் தாழ்ந்து விமர்சனம் பண்ணுவோம். நீங்கள் நடமாடவே முடியாது. பெரிய பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என்று திமுகவுக்கு எதிராக டாப் கியரில் எகிறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்