இன்று விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
“முதலமைச்சர் விருதுநகர் மாவட்டத்துக்கு வர்றாரு. சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டைன்னு 3 நகராட்சிக்கும் சேர்ந்து 444 கூட்டு குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுறாரு. மெடிக்கல் காலேஜுக்கு அடிக்கல் நாட்டுறாரு. 20,000-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு நலத்திட்டம் வழங்குறாரு. கட்டப்பட்டிருக்கிற நகராட்சி பில்டிங், யூனியன் பில்டிங் எல்லாம் திறந்து வைக்கிறாரு. ஆக, ஸ்பாட்லயே அந்தந்த மாவட்டத்தோட மக்கள் குறைகளைக் கேட்டு, மனு வாங்கி, பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய முதலமைச்சராக எடப்பாடியார் இருக்கிறார். இது பொறுக்கமுடியாத ஸ்டாலின், அவங்க ஆட்சில பாலும் தேனும் ஓடுன மாதிரி பேசிக்கிட்டிருக்காரு. அவங்க ஆட்சில கரண்ட்டே கிடையாதே! 16 மணி நேரம் மின் வெட்டு இருந்த ஆட்சி தான் தி.மு.க. ஆட்சி.
2006-ல வந்த தி.மு.க.வை 2 வருஷத்துக்கு அப்புறம் கிராமத்துக்குள்ளேயே நுழைய விடாம, திமுக மந்திரிகள விரட்டி விரட்டி மக்கள் அடிச்சாங்க. ஜெ.ஆட்சியில, இன்னைக்கு எடப்பாடியார் ஆட்சியில எந்த விதமான பிரச்சனைகளோ எதிர்ப்போ கிடையாது. மக்கள் சுபிட்சமா இருக்காங்க. பிரச்சினை இல்லாத ஒரு நல்லாட்சி நடத்திக்கிட்டிருக்கிற முதலமைச்சரா எடப்பாடியார் இருக்கிறார். இது பொதுமக்களை பாதிக்காத பட்ஜெட். இது முத்தான பட்ஜெட்னு நல்லவர்கள் வாழ்த்துறாங்க. ஸ்டாலின் யாரு? எதிர்கட்சி தலைவர். எதிர்கட்சி தலைவர்ன்னா வசைபாடாம வாழ்த்தவா செய்வாரு.
வருமான வரித்துறை எங்க கட்சிகாரங்களக்கூட ரெய்ட் பண்ணுச்சி. உடனே, அதுக்கு ஒரு குற்றாச்சாட்டா? அதெல்லாம் கிடையாது. அவங்களுக்கு கிடைக்கிற தகவல் அடிப்படைல போய் சோதனை போடுறாங்க. சோதனைல எதுவும் கிடைச்சதுன்னா நடவடிக்கை எடுப்பாங்க. இல்லைன்னா, எதுவும் எடுக்கப் போறதில்ல. அதுனால வருமான வரித்துறை.. அதுவந்து ஒரு தனி அமைப்பு மாதிரி செயல்பட்டுட்டு இருக்கு. அதுல அரசியல் தலையீடு எதுவும் கிடையாது. ரஜினிக்கு ஈக்வலா எல்லாம் நடிகர்கள்ல இப்ப யாரும் கிடையாது. ரஜினிக்கு ஈக்வல்னா அஜித் ஒரு ஆள்தான் இருக்காரு. இவங்க ரெண்டு பேருதான். அது மல. இது தல. அவ்வளவுதான்.” என்றார், வழக்கம்போல் அதிரடியாக.
ரஜினி, அஜித் அளவுக்கு விஜய்க்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதையே சூசகமாகச் சொல்கிறார், கே.டி.ராஜேந்திரபாலாஜி.