Published on 02/09/2022 | Edited on 02/09/2022
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
உணவு ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாகத் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.
நாளை திருச்சியில் அமமுக கட்சியின் சார்பில் திருச்சியில் மாவட்ட அளவில் கூட்டம் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.