திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களை சேர்ந்த கிராம மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு வழங்கினார். அப்போது ஆத்தூர் தொகுதியை சேர்ந்த படித்த இளைஞர்கள் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, தகுதியுள்ள படித்த இளைஞர்களுக்கு ஒரு பைசா செலவில்லாமல் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றதோடு முறையாக அரசு வேலைகளுக்கு விண்ணப்பம் செய்து விட்டு மனு கொடுத்தால் தகுதியுள்ள இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னால் முதல்வர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் மூலம் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலைஞரின் கனவு இன்று தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் நிறைவேறி வருகிறது. குறிப்பாக கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லாத தமிழ்நாடு உருவாகப் போகிறது. ஏற்கனவே கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழக முதல்வரின் தாய் உள்ளத்தை காட்டுகிறது என்று கூறினார்.
அப்போது, தமிழ்நாடு நாயுடு நாயக்கர் உறவின்முறை (பாதுகாப்பு சங்கம்) சார்பாக மாநில செயற்குழு தலைவர் அழகர் ராஜா தலைமையில் திருமலை நாயக்கரின் 442வது ஜெயந்தி விழாவிற்கான அழைப்பிதழை அமைச்சர் ஐ.பெரியசாமி நிர்வாகிகள் வழங்கினார்கள். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி திமுக ஆட்சியில்தான் முன்னால் முதல்வர் கலைஞர் உத்தரவுபடி மறைந்த சுதந்திர போராட்ட கோபாலநாயக்கருக்கு சத்திரப்பட்டியில் மணிமண்டபம் கட்டப்பட்டது என்றார். அதற்கு, நிர்வாகிகள் இதை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம் என்றார்.
அதன் பின்னர் ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த திண்டுக்கல் மாவட்ட பார்கவகுல சுருதிமார் மூப்பனார் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் தலைவர் டி.புதுப்பட்டி உதயக்குமார் செயலாளர் தருமத்துப்பட்டி என்.ராஜ்மணியம், பொருளாளர் வழக்கறிஞர் கே.முத்தையா, துணைத்தலைவர் முத்துராம்பட்டி முருகேசன், துணைச்செயலாளர் மணியகாரன்பட்டி காளியப்பன் மற்றும் டி.புதுப்பட்டியை சேர்ந்த நிர்வாகிகள் அமைச்சர் பெரியசாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
நிகழ்ச்சியின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், அமைச்சரின் உதவியாளர் ஹரிகரன், சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலக அலுவலர் வடிவேல் முருகன், திமுக நிர்வாகி அம்பை ரவி, திண்டுக்கல் மாநகர பொருளாளர் மீடியா சரவணன், பொதுக்குழு உறுப்பினர் டென்னி, கே.எஸ்.அக்பர், முன்னால் பொதுக்குழு உறுப்பினர் நெல்லூர் மலைச்சாமி, அகரம் பேரூராட்சிமன்ற தலைவர் நந்தகோபால், அய்யம் பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் ரேகா அய்யப்பன், மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் பொன்முருகன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் பாறைப்பட்டி வாஞ்சிநாதன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் கும்மம்பட்டி விவேகானந்தன், பஞ்சம்பட்டி மணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பண்ணைப் பட்டி அருண், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள் ஹேமபிரியா ரவிச்சந்திரன், சீவல்சரகு ராணி ராஜேந்திரன், டி.புதுப்பட்டி அருணாச்சலம், நாயுடு நாயக்கர் உறவின்முறை சங்கத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், ரஜினி, ஜனார்த்தனன், பாலாஜி, இளங்கோ, திண்டுக்கல் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கமலக்கண்ணன் மற்றும் சபாஷ் நாயக்கர், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர்கள் நெல்லை சுபாஷ், ஆனந்த், ஜான்பீட்டர், சக்திவேல், டி.புதுப்பட்டி ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், திமுக நிர்வாகிகள் தாடிக்கொம்பு அருள், முருகேசன், முத்துவேல், நகர திமுக நிர்வாகி நந்தி நடராஜன், நரசிங்கம், வீரபாண்டி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.