Skip to main content

தமிழ்நாட்டில் கூடுதல் கட்டுப்பாடுகள்..? - முதல்வர் இன்று ஆலோசனை

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

பர

 

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். ஜனவரி 10-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டது. கோயில்களில் தரிசனத்திற்குப் புதிய கட்டுப்பாடுகளும், வார இறுதி நாட்களில் தரிசனத்திற்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. 

 

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் கரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தீவிரமாக இருந்து வருகிறது. 10 நாட்களுக்கு முன்பு ஆயிரத்துக்கும் கீழாக இருந்த கரோனா பாதிப்பு தற்போது 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதே எண்ணிக்கையில் சென்றால் விரைவில் பெரிய அளவிலான எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜனவரி இறுதியில் பாதிப்பு இந்தியா முழுவதுமே உச்சநிலையில் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீட்டிக்கவும், புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் மருத்துவக் குழுவினருடன் முதல்வர் இன்று காலை ஆலோசனை செய்ய உள்ளார். அதில் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்