Skip to main content

கூடுதல் கட்டணம்: தியேட்டர் உரிமையாளர்கள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published on 28/08/2017 | Edited on 28/08/2017
கூடுதல் கட்டணம்: தியேட்டர் உரிமையாளர்கள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

விவேகம் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களில் தமிழக அரசு மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விவேகம் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தாக செம்பியம் தேவராஜன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில்   "சினிமா படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், புதிய படத்திற்கு தமிழக அரசு நிர்ணயித்த படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும்.
சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்களில் விவேகம் படம் திரைப்பட்ட முதல் நான்கு நாளில் ஆயிரம் முதல் 2 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும்.
திரையரங்களில் கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை " என மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இது தொடர்பாக தமிழக அரசு, காவல் துறை, சினிமா தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிலக்க நீதிபதி உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்