Skip to main content

தமிழக ராணுவ வீரர்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

Additional allocation of funds in the budget for the soldiers of Tamil Nadu

 

போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கருணைத்தொகையை உயர்த்தி வழங்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் தாக்கல் செய்து வருகிறார். 2023 -2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் வகையில் நிதியமைச்சர் முன்வரிசையில் நின்று படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிதியமைச்சர் தனது உரையை துவங்கும் போதே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். எனினும் நிதியமைச்சர் தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்தார். 

 

முன்னாள் படைவீரர்கள் நலன் குறித்து வாசித்த பொழுது, “நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் படை வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில், போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளின் போது உயிர்த்தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படை வீரர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசால் வழங்கப்படும் கருணைத்தொகை 20 இலட்சம் ரூபாயிலிருந்து இருமடங்காக உயர்த்தி 40 இலட்சம் ரூபாயாக வழங்கப்படும். மேலும், வீரதீரச் செயல்களுக்காக உயர் விருதுகளைப் பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினருக்கு தற்போது வழங்கப்படும் பரிசுத்தொகையும் நான்கு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்” எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்