சிதம்பரம் அருகே படபிடிப்பில் கீழே விழுந்து
நடிகர் விஷாலுக்கு பலத்த அடி
சிதம்பரம் அருகே பிச்சாவரம் சதுப்புநிலகாட்டில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால், நடிகை ஆண்டிரியா நடிக்கும் துப்பறிவாளன் திரைபடத்தின் படிபிடிப்பு கடந்த பிப்ரவரி மாதத்தில் 10 தினங்களுக்கு மேல் நடைபெற்றது. பின்னர் 4 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த ஒரு வாரத்திற்கு மேல் அதே இடத்தில் படத்தின் இறுதி சண்டை காட்சிகள் எடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் திங்களன்று பிச்சாவரம் வனப்பகுதியில் உள்ள போர்ட்வாக் (வன நடைமேடை) என்ற இடத்தில் சண்டைக்காட்சிக்கான படபிடிப்பு நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், வினையன் கயிற்றில் தொங்கிகொண்டு வருவது போல் படமாக்கப்பட்டது.
அப்போது விஷால் கை வழுக்கி கீழே விழுந்துள்ளார். அவரை பிடிக்க முயற்சித்த போது நடிகர் வினையனும் கிழே விழுந்துள்ளார். இதனால் இருவருக்கும் தோல்பட்டை, கணுக்காலில் சிறிதாக அடி ஏற்பட்டு வலியால் அவதி அடைந்தனர். பின்னர் இருவரும் அதே இடத்தில் ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்துகொண்டு மீண்டும் சண்டைக்காட்சியில் நடித்தனர்.
- காளிதாஸ்