நடிகர் செந்தில், டிடிவியை கைது செய்ய தடை!
நடிகர் செந்தில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’திருச்சி எம்.பி குமார் மீது அவதூறாக பேட்டி அளித்தார். அவர் மீதும் அவரை தூண்டி விட்டு பேச வைத்தார் டி டி வி என்று திருச்சி குற்ற பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் திருச்சி குற்ற பிரிவுபோலிஸ்க்கு அதிகாரம் இல்லை என்று செந்தில் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கை தள்ளுபடி செய்ய மனு செய்தார். வழக்கின் விசாரணை நீதியரசர் சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், நீதிபதி வழக்கை விசாரணை செய்ய இடைகாலத் தடை விதித்து இருவரையும் கைது செய்ய தடையும் விதித்தார் .வழக்கை வரும் அக் 4 க்கு தள்ளி வைத்தார் நீதியரசர்.
- முகில்